பத்து கற்பனைகள்

Exodus 20:1-17
பத்து கற்பனைகள் - யாத்திராகமம் 20:1-17 | Bible Hunger

தேவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி உரைத்ததாவது:

  1. "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்." (யாத்திராகமம் 20:3)
  2. "மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." (யாத்திராகமம் 20:4-5)
  3. "உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்." (யாத்திராகமம் 20:7)
  4. "ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்." (யாத்திராகமம் 20:8-10)
  5. "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக." (யாத்திராகமம் 20:12)
  6. "கொலை செய்யாதிருப்பாயாக." (யாத்திராகமம் 20:13)
  7. "விபசாரம் செய்யாதிருப்பாயாக." (யாத்திராகமம் 20:14)
  8. "களவு செய்யாதிருப்பாயாக." (யாத்திராகமம் 20:15)
  9. "பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக." (யாத்திராகமம் 20:16)
  10. "பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்." (யாத்திராகமம் 20:17)

ஒழுக்கத்தின் திசைகாட்டி

முதல் நான்கு கற்பனைகள் நம்முடன் கடவுளுக்குள்ள உறவை (செங்குத்து) விளக்குகின்றன, கடைசி ஆறு கற்பனைகள் மனிதர்களுடனான நம் உறவை (கிடைமட்டம்) விளக்குகின்றன. இவை நம்மைக் கட்டுப்படுத்தும் விதிகள் அல்ல, நம்மைப் பாதுகாக்கும் வேலிகள்.

முக்கிய பாடம்: தேவனுடைய எல்லைக்குள் வாழ்வதே உண்மையான சுதந்திரம்.

← முந்தைய பதிவு மிகப்பெரிய கற்பனைகள் அடுத்த பதிவு → 613 கட்டளைகள் (Mitzvot)
📜
உங்கள் வேத அறிவை சோதியுங்கள்

தேவனுடைய கற்பனைகள் வினாடி வினா

பத்து கற்பனைகள் மற்றும் அன்பின் பிரதான கட்டளைகளை சோதியுங்கள்.

வினாடி வினாவை தொடங்குங்கள்